"நான் ஒரு அப்பாவி.. குறுக்கால மாடு.." ஜட்ஜ் முன் TTF போட்ட பாவ நாடகம் - ஆடிப்போன கோர்ட்

Update: 2023-10-05 06:17 GMT

நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சாலையில் மிதமான வேகத்திலேயே வந்ததாகவும், கால்நடைகள் குறுக்கே கடந்ததால் திடீரென பிரேக் போட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பைக்கின் சக்கரம் தூக்கியதாக குறிப்பிட்டுள்ள அவர், ஒரு வேளை பிரேக் போடாமல் இருந்திருந்திருந்தால் கால்நடை மற்றும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார். சிறையில் காயத்திற்கு உரிய சிகிச்சை பெறமுடியவில்லை எனவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தான் ஒரு அப்பாவி என குறிப்பிட்டுள்ள டிடிஎஃப் வாசன், எந்தவொரு குற்றத்திலும் ஈடுபடவில்லை எனவும், நீதிமன்றத்தின் நிபந்தனைக்கு கட்டுப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்