டிரம்பை விட ஒரு அடி முன்னால் நிற்கும் கமலா ஹாரிஸ்.. வரலாற்றிலே இதான் முதல்முறை..
அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் வாட்ஸ்-அப் சேனல் மூலமாக பிரசாரம் மேற்கொள்ளும் பணியை தொடங்கினார். லத்தின் அமெரிக்க வாக்காளர்கள் அதிகம் வாட்ஸ்-அப்பை பயன்படுத்துவதால் அவர்களைக் கவர பிரத்யேக வாட்ஸ்-அப் சேனல் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வாட்ஸ்-அப் சேனல் மூலம் பிரசாரம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என ஜனநாயகக் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.