தமிழகத்தில் மெல்ல மெல்ல டெம்போவை ஏற்றும் கிளைமேட்.. பகீர் வானிலை அறிவிப்பு

Update: 2024-09-30 03:45 GMT

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, மற்றும் தூத்துக்குடியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரம், அதனை ஒட்டிய குமரிக்கடல், தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்