திருச்சி மாநகராட்சி மேயருக்கு தி.மு.க. பெண் கவுன்சிலர் அல்வா கொடுத்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பேசிய, 63வது வார்டு கவுன்சிலர் பொற்கொடி, உதவியாளர் மூலம் ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை மேயர் அன்பழகனுக்கு கொடுத்து அனுப்பினார். அதை ஆர்வமுடன் மேயர் அன்பழகன் திறக்க முயன்ற போது, தங்கள் வார்டு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாததால், அவர்களின் மனக்குமுறலை வெளிப்படுத்த அல்வா கொடுக்கிறேன் என பொற்கொடி கூறினார். இதைக்கேட்ட அன்பழகன் ஸ்வீட் பாக்ஸை திறக்காமல் வைத்துவிட்டார்.