திருச்சியில் உயர் மின்னழுத்த கம்பியில் பட்டு, ஃபிளக்ஸ் போர்டு சரிசெய்யும் ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி குடமுருட்டி செக்போஸ்ட் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில், ஃபிளக்ஸ் போர்டு சரிசெய்யும் பணியில் 2 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில், அசோக் என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடல் முழுவதும் கருகி ஆபத்தான நிலையில் உள்ள கோபி என்ற ஊழியர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து விரைந்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.