இறங்கிய முதல் விமானம்...'வாட்டர் சல்யூட்' வரவேற்பு

Update: 2024-08-11 08:54 GMT

திருச்சியில் இருந்து நேரடியாக வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை கோரிக்கை எழுந்த நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சார்பில், அபுதாபியில் இருந்து திருச்சிக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த முதல் விமானத்திற்கு 'வாட்டர் சல்யூட்' வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விமான சேவை வாரத்திற்கு நான்கு முறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்