உயிர் இல்லமால் வெளியே வந்த தாய், மகள்... மணப்பாறையை உலுக்கிய சம்பவம்

Update: 2024-08-18 03:04 GMT

உயிர் இல்லமால் வெளியே வந்த தாய், மகள்... மணப்பாறையை உலுக்கிய சம்பவம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கிணற்றில் இருந்து தாய் மற்றும் மகள் சடலமாக மீடகப்பட்டனர். பொம்மம்பட்டியை சேர்ந்த தம்பதி சுரேஷ் மற்றும் ஜமுனா. இவர்களில் ஜமுனா தனது 6 வயது மகளுடன் வயலுக்கு சென்றிருந்தார். வெகு நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாத நிலையில், தோட்டத்தில் அவர்களது செருப்பு மட்டும் கிடந்தது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், கிணற்றில் இருந்து இருவரையும் சடலமாக மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்