ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோயில் படிக்கட்டில் தவறி விழுந்து, ரஷ்ய பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து லரிஜா என்ற பெண், கடந்த 3ம் தேதி ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தார். அப்போது கோயில் படிக்கட்டில் தவறி விழுந்த அவருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர், தற்போது ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.