விவரம் தெரியாத மூதாட்டிக்கு 3 ஆண்டுகளாக நடந்த துயர சம்பவம்..யாருக்குமே நடக்கக்கூடாத சோகம்

Update: 2023-11-23 01:56 GMT

சாத்தான்குளம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கம். 95 வயதான இவர், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு முதியோர் உதவித்தொகை வேண்டுமென சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியருக்கு மனு அளித்திருந்தார். அதன்பின்னர், அடுத்த மாதத்தில் இருந்து கடந்த மே மாதம் வரை, மாதா மாதம் 1000 ரூபாய் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதனை சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் இந்த மூதாட்டி இடம் நேரில் வந்து கூறவில்லை என கூறப்படுகிறது. மூதாட்டியும் நேரில் சென்று பார்க்கும் அளவுக்கு விவரம் தெரியாதவர் என்பதால், ஓய்வூதியம் ஏறியதை பார்க்கவில்லை. இந்நிலையில், பக்கத்து வீட்டில் உள்ள ஒருவருடன் சென்று பார்த்த போது, வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்பட்டிருந்த‌தும், கடந்த 3 ஆண்டுகளாக எடுக்காமல் இருந்த‌தால், அரசே திருப்பி எடுத்துக் கொண்டதும் பதிவாகியிருந்த‌து தெரிய வந்த‌து. இது தெரியாமல், மீண்டும் மீண்டும் விண்ணபித்து வந்த‌ மூதாட்டி, திருப்பி எடுக்கப்பட்ட 36 ஆயிரம் ரூபாயை மீண்டும் வரவு வைக்க வேண்டும் என்றும், சேதமடைந்து கிடக்கும் தன்னுடைய வீட்டை புதுப்பித்து தரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்