மாவு அரைத்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம் - அடுத்த நொடியில் ஏற்பட்ட சோகம்

Update: 2023-08-05 13:43 GMT

சிட்லப்பாக்கத்தில் கிரைண்டரில் இட்லி மாவு அரைத்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுசென்னை சிட்லப்பாக்கம் அடுத்த நேதாஜி சுபாஷ் சந்திரப்போஸ் தெருவை சேர்ந்த ஜெகதீஸ் அவரது மனைவி விஜிலா வீட்டிலேயே இட்லி மாவு அரைத்து விற்பனை செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய ஜெகதீஸ் மனைவி விஜிலா மயக்க நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவனை கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த சிட்லப்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்