ஊருக்குள் புகுந்து வெறியாட்டம் - பைக்குகள் வீடுகள் சூறை - 20 பேர் கும்பலால் களேபரமான ஊர்

Update: 2023-08-04 11:52 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ஒரு சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள் மற்றொரு சமூகத்தினர் புகுந்து, இருசக்கர வாகனங்கள், வீடு உள்ளிட்டவைகளை சேதப்படுத்திவிட்டு தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி வஉசி தெரு மற்றும் ஊரணி தெரு பகுதிகளில், 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிக்குள் புகுந்த 20ற்கும் மேற்பட்ட கும்பல், வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. மேலும் வீட்டின் மேற்கூரையை சேதப்படுத்தியதுடன், கற்களை கொண்டும் வீசிவிட்டு தப்பியோடியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, 30க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்