தொடர் விடுமுறை எதிரொலியாக, முதுமலை யானைகள் முகாமில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் முதுமலை வந்து, அங்கு வளர்க்கப்படும் யானைகளுக்கு உணவு வழங்குவதை கண்டு களித்தனர். தொடர்ந்து 'ஆஸ்கர்' புகழ் ரகு யானையை கண்டு மகிழ்ந்தனர்...