தமிழகம் முழுவதும் ஆங்காங்கே திரண்ட பக்தர்கள்.. ஜெகஜோதியாக நடந்த கும்பாபிஷேகம் | TN Temple

Update: 2024-07-12 16:21 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயிலில், கும்பாபிஷேக விழா 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்றது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள நாகம்மாள் கோவிலில், 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள சௌந்திர நாயகி உடனுறை சோமேஸ்வரர் ஆலயத்தில், மஹா கும்பாபிஷேக விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக, ஆயிரக்கணக்கான பெண்கள் தீர்த்த குடங்களை ஏந்தி ஊர்வலம் வந்தனர்.

பரமக்குடி அருகே மும்மடிச்சாத்தான் பகுதியில் உள்ள ஸபெரிய நாகேஸ்வரர் கோயிலிலும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதிலும், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்