Alert Mode-ல் குழுக்கள்... அனைத்துக்கும் தயாரான தமிழகம் | north east monsoon

Update: 2024-10-15 02:54 GMT
  • வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையும், 12 காவல் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தலைமை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.இதேபோல், 12 காவல் மாவட்டத் துணை ஆணையர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • இது மட்டுமின்றி தாழ்வான மற்றும் பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் 35 கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து, பொதுமக்கள் மற்றும் ஒருங்கிணைந்த பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்பு கொள்ள வசதியாக பிரத்யேக தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
  • கனமழை, புயல், வெள்ளம், சூறாவளிக் காற்று என இயற்கை பேரிடர் ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பிற்கு இருப்பிடம் தேடி உதவி செய்யவும் 12 காவல் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு மீட்பு குழுவுக்கும் தலா ஒரு வாகனம், ரப்பர் படகு, மிதவை ஜாக்கெட்டுகள், கயிறு, உட்பட 21 மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுப் பணித்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளுடன் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்