தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் அடித்து நொறுக்கிய மழை.. சட்டென்று மாறிய வானிலை | Rain
புதுக்கோட்டை ஆலங்குடி, வம்பன் நால் ரோடு, கீரனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நாகை நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், பரவை உள்ளிட்ட இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக, தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பரவலாக பெய்த மழையின் காரணமாக, கடைமடை பகுதியில் சம்பா பணிகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளான இடையர் வலசை, சூரங்கோட்டை, முதுனாள், பேராவூர் அச்சுந்தன்வயல், ஆர் எஸ் மடை பட்டினம் காத்தான், பாம்பன் தங்கச்சிமடம்,
ஆர் எஸ் மங்கலம் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 93 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.