இடி மின்னலுடன் அடித்து நொறுக்கிய கனமழை.. டோட்டலாக மாறிய தமிழகத்தின் கிளைமேட்

Update: 2024-10-06 02:31 GMT

தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்த‌து.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சுற்றியுள்ள கீழமேல்குடி, வளநாடு கால்பிரிவு சிப்காட் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்த‌து.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்மேடு, வில்லியநல்லூர், சித்தர்காடு குத்தாலம், கோமல், பாலையூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக பரவலாக கனமழை பெய்த‌து.

கும்பகோணம் மாநகராட்சியில் செட்டிமண்டபம், சாக்கோட்டை, கிருஷ்ணாபுரம், அசூர், உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்த‌தால் வெப்பம் தணிந்த‌து.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதி, கத்தாளம்பட்டி, சத்திரப்பட்டி, சடையம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 2 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருத்தணியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், 2 பேர் ஷாம்பு போட்டு குளித்தனர். இதனால், பேருந்து நிறுத்த‌த்தில் காத்திருந்த பொதுமக்கள் முகம் சுழித்தவாறு சென்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்