``கைது..'' - தமிழக காவல்துறை பரபரப்பு விளக்கம் | TN Police

Update: 2024-10-08 12:26 GMT

கஞ்சா ஒழிப்புக்காக நடத்தப்பட்ட ஆபரேஷன்கள், அதன் மூலம் அழிக்கப்பட்ட கஞ்சா குறித்து அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு எதிராக நிதி விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் அசையும் அசையா சொத்துக்கள் முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை 77 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 8 ஆயிரத்து 849 வங்கிக் கணக்குகளில் 18 கோடி ரூபாய் கோடி முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத‌த்தில், ஆயிரத்து 965 கிலோ கஞ்சா, 10 ஆயிரத்து 634 மாத்திரைகள், மெத்தாம்பெட்டமைன், ஆம்பெடமைன், கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆயிரத்து 148 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்காக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வருவதாகவும், இதுவரை சுமார் 8 லட்சத்து 20 ஆயிரம் பேர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்