கோவை மாவட்டம் பேரூர் அருகே சட்டவிரோதமாக செம்மண் எடுப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரூர் தாலுகாவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மதுக்கரை, ஆலந்துரை, வெள்ளிமலை உள்ளிட்ட கிராமங்களில், சட்ட விரோதமாக செம்மண் எடுக்கப்படுவதாக வீடியோ ஆதாரங்களுடன் புருஷோத்தமன் என்ற வழக்கறிஞார்
சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதுகுறித்து நேரில் சென்று ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில், கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில் மண் எடுத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
பெருமளவில் செம்மண் எடுத்தால் மேற்கு தொடர்ச்சி மலையே காணாமல் போய்விடும் என்றும் நிலச்சரிவு ஆபத்து ஏற்படும் எச்சரித்த நீதிபதிகள், அங்கு செம்மண் எடுப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.