ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமர்கோயில் கும்பாபிஷேகத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே மேலோங்கியுள்ளது... அதனை நிறைவேற்றும் வகையில், நாளை அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.