தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரபுக்கு மாறாக, ஆளுநர் நடந்து கொண்டது தேசிய கீதத்தையே அவமதிக்கிற செயல் என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை பார்க்கும் போது, ஆளுநர் பதவிக்கே அவமானச் சின்னமாக திகழ்வதாக விமர்சித்துள்ள கே.எஸ்.அழகிரி, ஆளுநர் மாளிகையில் இருந்து ஆர்.என்.ரவி என்றைக்கு வெளியேறுகிறாரோ, அந்த நாள்தான் தமிழகத்தின் நன் நாளாக கருதப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.