அங்கீகரிக்கப்படாத `துணை முதல்வர்' பதவி... ஆளுநரின் பங்கு என்ன?

Update: 2024-09-18 16:09 GMT

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிப்பது முதலமைச்சருடைய தனிப்பட்ட அதிகாரம் என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட பதவி அல்ல என்பதால் துணை முதல்வர் பதவி ஏற்பு விழா நடைபெறாது. தமிழக அரசு பொது துறையிலிருந்து, துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை, அதிகாரப்பூர்வமாக ஆளுநர் மாளிகைக்கு தெரியப்படுத்தப்படும். அதே நேரத்தில் மரியாதை நிமித்தமாக உதயநிதி ஸ்டாலின், ஆளுநரை சந்திப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்