லட்சத்தில் ஒருவரை தாக்கும் நோய்...உயிருக்கு போராடிய வடமாநில பெண்... உயிர் காத்த கலைஞர் காப்பீட்டு
ஒரு லட்சம் பேரில் 12 பேருக்கு வரும் அரியவகை நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்ட வட மாநில பெண் கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
குயில்லன் பார்ரே என்ற அரியவகை நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்ட வடமாநில தேயிலை தோட்ட தொழிலாளி ராஜ்கனி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கை, கால்கள் செயல்படாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முழுமையாக நலமடைந்த ராஜ்கனி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் உயிர் காக்கும் சிகிச்சை அளிப்பதில் அரசு மருத்துவமனைகள் முன்மாதிரியாக திகழ்கிறது என மருத்துவமனை பொறுப்பு முதல்வர் தர்மராஜ் தெரிவித்தார். இந்த நோய் கர்ப்ப காலத்தில் பெண்களை தாக்குவதாகவும், ஒரு லட்சம் கர்ப்பிணிகளில் 12 பேர் மட்டும் பாதிக்கப்படுவதாகவும் தர்மராஜ் கூறினார்.