#Breaking : "கூடுகிறது சட்டப்பேரவை... பிப்., 19ல் பட்ஜெட் தாக்கல்.." - வெளியான முக்கிய தகவல்
2024ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 12 தொடங்க வாய்ப்பு
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் 2023-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதன் பின்னர் பல்வேறு கூட்டத் தொடர்கள் நடைபெற்றன.
கடந்த நவம்பர் 18-ந் தேதியன்று சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கவர்னர் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் ஆய்வு செய்து நிறைவேற்றுவதற்காக சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் கடந்த 24-ந் தேதி அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டார். அதில், 9.1.2023 அன்று தொடங்கி நடைபெற்று வந்த சட்டசபை கூட்டத் தொடர், இந்த அறிவிப்பாணை வெளியான தேதியோடு முடித்து வைக்கப்படுகிறது என்று கவர்னர் அறிவித்துள்ளார் என்று கூறப்பட்டது
எனவே, இந்த ஆண்டு தொடங்க உள்ள சட்டசபை கூட்டத் தொடருக்கான புதிய உத்தரவை, அரசு கேட்டுக் கொண்ட தேதியில் கவர்னர் ஆர்.என்.ரவி பிறப்பிப்பார். கூட்டத் தொடரின்
ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின்பிப்ரவரி 7-ந் தேதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்த ஆண்டுக்கான சட்டசபை முதல் கூட்டத் தொடர், பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மேலும் இந்த ஆண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதிசட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்றும் இருபதாம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது