வெறும் கையுடன் தூய்மைப் பணி - வேதனையுடன் கோரிக்கை அளித்த மக்கள்

Update: 2024-10-23 03:26 GMT

வெறும் கையுடன் தூய்மைப் பணி - வேதனையுடன் கோரிக்கை அளித்த மக்கள்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் பாதுகாப்பு கவசமின்றி வெறும் கையுடன் தூய்மைப் பணியாளர்கள் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்கிறார்கள்.

பொன்னேரி நகராட்சியில் வீடு, கடைகளில் இருந்து தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளையும், கழிவுநீர் கால்வாய்களில் உள்ள குப்பைகளையும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்புக்கு கையுறை, பாதுகாப்பு காலணி, முகமூடி, தலைக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என விதிகள் இருந்தபோதிலும், அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் அணியாமல், வெறும் கைகளாலேயே தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சாக்கடை கழிவுகளுடன் கால்வாயில் தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் கழிவுகளை துர்நாற்றத்தை பொருட்படுத்தாமல் கால்வாய்க்குள் இறங்கி அப்புறப்படுத்தினர். இதனால் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்