சென்னையை சுற்றி அசுர மழை.. 12 அடி Subway-ஐ மூழ்கடித்து திணறவிட்ட வெள்ளம்

Update: 2024-09-26 04:13 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில், இரவு நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பட்டாபிராம் சேக்காட்டில் உள்ள சுரங்கப்பாதையை மழைவெள்ள நீர் மூழ்கடித்துள்ளது. சுமார் 12 அடி உயரம் கொண்ட ரயில்வே சுரங்கப்பாதையில், 6 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியிருந்தது. இதனால் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதைத்தொடர்ந்து ஆவடி மாநகராட்சி உத்தரவின் பேரில், பட்டாபிராம் சேக்காடு சுரங்கப்பாதையை பேரிகார்டுகள் வைத்து போலீசார் தற்காலிகமாக மூடினர். சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி போக்குவரத்திற்கு வழிவகை செய்திட வேண்டுமென, ஆவடி மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்