பெருக்கெடுத்த ஏரி... மிதக்கும் ஆவடி... ஹைவேஸ் தோண்டிய கால்வாயால் டென்ஷனான கலெக்டர்
ஆவடியை அடுத்த கோவில் பதாகையில் 570 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி, நிரம்பி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மாநகராட்சி மேயர் உதயகுமார் மற்றும் அதிகாரிகள் கோவில் பதாகை ஏரியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஏரியின் இரண்டு மதகுகளில், ஒன்றை உடனடியாக மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக மூடி, உபரி நீரை ஒரு மதகு வழியாக வடிய செய்ய ஆட்சியர் பிரபு சங்கர் அறிவுறுத்தினார். அப்போது, நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையை ஒட்டி மழைநீர் கால்வாய் எதற்காக போடப்பட்டுள்ளது? எந்த ஆய்வும் செய்யாமல் பாலைவனத்தில் கால்வாய் போடுவது போல அமைத்துள்ளார்கள் என ஆட்சியர் கடிந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், அடுத்த பருவமழையை சிறப்பாக கையாள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.