மகனுக்காக கதறிய தாய்... ஒரே ஆள் அந்நியன் போல் மாறி மாறி பேசிய வைரல் வீடியோ

Update: 2024-10-18 07:00 GMT

மகனுக்காக கதறிய தாய்... ஒரே ஆள் அந்நியன் போல் மாறி மாறி பேசிய வைரல் வீடியோ

திருப்பூரில் பொய் வழக்கு போட்டு தனது மகனை போலீசார் கொடுமைப்படுத்துவதாக தாய் கண்ணீர் மல்க புகாரளித்த நிலையில், அவருடைய மகன் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கேயம் கடலை காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த சக்திகனி என்பவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவருடைய இளைய மகன் தினேஷ் கடையில் இருந்தபோது அங்கு வந்த போலீசார் கடையில் குட்கா, ஆன்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறி அவரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். தொடர்ந்து, அவரை போலீசார் சரமாரியாக தாக்கியதால் படுகாயமடைந்ததாக கூறி தினேசை அவரது தாயார் திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இருப்பினும், அங்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் மீண்டும் தினேஷை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று சித்ரவதை செய்வதாகவும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவருடைய தாயார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகாரளித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்