திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க நிர்வாகி ராஜ்மோகன் குமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர், துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்தி பெயரை பயன்படுத்தி, கோவையில் குப்பை அள்ளும் ஒப்பந்தம் எடுத்ததுடன், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. ராஜ்மோகன்குமார் பேசிய வீடியோவை அக்கட்சியை சேர்ந்தவர்களே தலைமைக்கு அனுப்பிய நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.