2 மணிநேரம் பொறுத்து பொறுத்து பார்த்து பொங்கி எழுந்த பெண்கள்..அரண்டுபோன கலெக்டர் ஆபிஸ் அதிகாரிகள்
2 மணிநேரம் பொறுத்து பொறுத்து பார்த்து பொங்கி எழுந்த பெண்கள்..அரண்டுபோன கலெக்டர் ஆபிஸ் அதிகாரிகள் - பரபரப்பு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் நிகழ்வின் போது அதிகாரியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் வாவிபாளையம் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த போது, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மனுவை சரி பார்க்காமல் அதிகாரிகள் காத்திருக்க வைத்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது, அதிகாரி சக்கரவர்த்தியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.