திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அவினாசிபாளையம் கலங்கு தோட்டம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக வைத்திருந்த
சிதம்பரம் மற்றும் நந்தகுமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், 5 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.