காதை மூடவைத்த வக்கீலின் ஆபாச அர்ச்சனை... கோர்ட்டில் போலீசுக்கே இந்த நிலையா? வைரல் வீடியோ
BEEP போடும் அளவிற்கு அவ்வளவு கொச்சை
காதை மூடவைத்த வக்கீலின் ஆபாச அர்ச்சனை
கோர்ட்டில் போலீசுக்கே இந்த நிலையா?
தமிழகத்தையே அதிரவைத்த வீடியோ
திருப்பத்தூர் நீதிமன்றத்தில் காவலரை ஆபாசமாக பேசிய வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இதன் பின்னணி என்ன?...
நியாயம் வழங்கும் புனிதமான நீதிமன்றத்தில் நின்று கொண்டு வாதாட வேண்டிய வழக்கறிஞர் வாய்கூசாமல் ஆபாசமாக திட்டித் தீர்க்கும் காட்சிகள் தான் இவை...
எதற்காக இவ்வளவு களேபரம்?...
திருப்பத்தூர்...ஜோலார்பேட்டை அடுத்த பெண் ஒருவர் தனது காரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தில்லை நகரைச் சேர்ந்த கமலக் கண்ணன் மற்றும் சாய்பாபா நகரைச் சேர்ந்த பைரோஸ் கார் ஆகியோரிடம் 1 லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார்...
அப்பெண் அடமானம் வைத்த காரை கமலக்கண்ணனும், பைரோஸ் கானும் கூட்டு சேர்ந்து வேறொரு நபருக்கு 3 லட்ச ரூபாய்க்கு போலியாக பத்திரம் ஏற்பாடு செய்து விற்று விட்டதாகத் தெரிகிறது...
காரைத் திரும்பக் கேட்ட பெண்ணிடம்...காரையெல்லாம் தர முடியாது...என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என கமலக்கண்ணனும் பைரோஸ் கானும் கொலை மிரட்டல் விடுத்தனராம்...
இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தனது காரை மீட்டுத் தரக்கோரி மாத்திரை சாப்பிட்டு மயங்கினார்...
இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் இன்று காலை கமலக்கண்ணன் மற்றும் பைரோஸ் கான் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அப்போது இந்த இருவருக்கும் ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ்...இருவரிடமும் நீதிபதி கேட்கும் போது உடல்நிலை சரியில்லை என கூறுங்கள் எனக்கூறினாராம்...
இதைப் பார்த்த காவலர் குடியரசனோ...எதற்காக இப்படி தவறாக வழிநடத்துகிறீர்கள் என தட்டிக்கேட்க...ஆத்திரமடைந்த வழக்கறிஞர் சுரேஷ்...காவலர் குடியரசனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்...
அத்தனை பேர் சுற்றியிருக்க எதையும் கண்டுகொள்ளாமல் வழக்கறிஞர் சுரேஷ் அநாகரீகமாக...கண்மூடித்தனமாக திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
அதிலும் ஒரு கட்டத்தில்..."இது எங்க கோர்ட்டு...நாங்க கத்துவோம்" என்று நீதிமன்றம் ஏதோ தன் சொந்த வீடு என்பதைப் போல் பெருமையடித்துக் கொண்டார் வழக்கறிஞர் சுரேஷ்...
நீதிமன்றத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் காவலரை ஆபாசமாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...