இளைஞர்களிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.4 கோடி விபூதி அடித்த ஒற்றை நபர்! திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 4 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மல்லகுண்டா பகுதியை சேர்ந்த பிரதீப்குமார், சுமார் 60 இளைஞர்களை நியூசிலாந்து நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி, அவர்களிடம் தலா 7 லட்சம் பெற்று தலைமறைவானதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், பிரதீப்குமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், புகாரின் பேரில் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்