திருச்செந்தூரில் பௌர்ணமி தரிசனத்தை முன்னிட்டு பக்தர்கள் குவிந்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். கடலில் புனித நீராடி நாழிக்கிணற்றில் குளித்து விட்டு நீண்ட நேரம் தங்களது குடும்பத்தினருடன் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.