துணை தலைவர் கொடுத்த டார்ச்சர்..கலெக்டரை அதிரவிட்ட ஊ. தலைவி - பரபரப்பு காட்சிகள்

Update: 2024-08-21 05:34 GMT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டிவனம் தாலுகா அவ்வையார்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கமலக்கண்ணன். இவர் ஆட்சியர் அலுவலகம் வந்த‌தும், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தேர்தலில் வெற்றி பெற்ற நாளில் இருந்து, ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட விடாமல், துணைத் தலைவர் தடுத்து சாதிய மனநிலையோடு நடந்து வருவதாக குற்றம் சாட்டினார். மக்கள் பணிகளையும் செய்ய விடாமல் முட்டுக்கட்டை போடுவதோடு, சாதி பெயரை சொல்லி இழிவாக பேசுவதாகும் வேதனை தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்ற மகாலட்சுமி, ஊராட்சி மன்றத் தலைவருக்கு உரிய முழு அதிகாரத்தையும் தனக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவற்றை, ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக போலீசார் கூறியதை அடுத்து, மகாலட்சுமி புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்