- பழனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் உள்ளிட்ட மூன்று பேர் தற்கொலை கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- முல்லை நகரில் வசித்து வருபவர் இளங்குமரன், பழனியில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி மேல்கரைபட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை ஆக பணியாற்றி வருகிறார். மகள் தேன்மலர் 12-ம் வகுப்பு படித்து வந்தார். மகன் வினித் கோயம்புத்தூரில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வீட்டிலிருந்த இளமாறன் மனைவி ரேணுகாதேவி மற்றும் மகள் தேன் மலர் மூவரும் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அண்டை வீட்டார்,
- கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மூவரும் சடலமாக கிடந்ததை கண்டு
- அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இளங்குமரன் மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.