அரசு ஆபீஸ்-ல் 15 ஆண்டுகளாக மெகா கைவரிசை காட்டிய பெண்..திடீர் மாயம்.. கிளம்பிய சந்தேகம்
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவிற்கு கவலையாக மாறியுள்ள நிலையில், "இந்தியாவின் தேச பாதுகாப்பை நாங்கள் எந்த வகையிலும் பாதிக்க மாட்டோம்" என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு அதிபர் மாளிகையில் தந்தி தொலைக்காட்சிக்கு இலங்கை அதிபர் அளித்த பிரத்யேக பேட்டியில் இலங்கை-சீனா உறவு குறித்து மனம் திறந்தார்.
இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் இலங்கை செய்யாது என்றும்,
அது தவிர, வேறு எந்த நாடும் வணிக ரீதியான நடவடிக்கைகளை இலங்கையில் செய்யலாம் என்பதில் தெளிவாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் ரணில்...
அதேபோல், சீனாவின் உளவு கப்பல்கள், Nuclear submarineகள் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,
எந்தக் கப்பல் அல்லது நீர் மூழ்கிக் கப்பல் வந்தாலும் அதற்கு ஒரே மாதிரி விதிமுறைகளைத் தான் இலங்கை பின்பற்றுவதாகவும்,
இந்த விஷயத்தை நேரடியாக இந்தியாவிடமே பேசி தீர்த்து விட்டதாகவும் தெரிவித்தார்...
அத்துடன் இந்தியாவின் தேச பாதுகாப்பை எந்த வகையிலும் பாதிக்க மாட்டோம் என உறுதியளித்த இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க...
1987 முதலே எல்லா இலங்கை அரசுகளும் இதைத் தான் பின்பற்றி இருக்கின்றன என தெளிவுபடுத்தினார்.