மயானத்தில் 2 பிணங்கள்.. வேடிக்கை பார்த்தவருக்கு சொட்டிய ரத்தம்.. மிரண்டுபோன போலீஸ்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகன மேடையில்... இரு பிரிவினருக்கிடையே தகராறு ஏற்பட்டு மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரே சமயத்தில் இருவரது உடல் தகனம் செய்யப்பட இருந்த நிலையில், யார் முதலில் தகனம் செய்வது என்பதில் இரு தரப்பினர் மோதியுள்ளனர். தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்த இசக்கி ராணி மற்றும் அண்ணா நகரை சேர்ந்த அய்யாதுரை என்பவரின் உடலை தகனம் செய்வதில் இரு தரப்புக்கிடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாகி இருக்கிறது.
இதில், திடீரென சிலர் சாலை மறியலில் ஈடுபட முயன்ற நிலையில், அவர்களை போலீசார் அடித்து விரட்டியது பரபரப்பை மேலும் கூட்டியது.