தூத்துக்குடியில் சர்வதேச சரக்கு பெட்டக முனையம்.. மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்
தூத்துக்குடி துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் திறந்து வைத்தார். வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் 9 வது கப்பல் தளத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச சரக்கு பெட்டக முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முனையம் 370 மீட்டர் நீளமும் 14.20 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். 8000 வரையிலான பெட்டகங்களை இது கையாளும். இதனை திறந்து வைத்த மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால், பல்வேறு திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் சாந்தனு தாக்கூர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....