தமிழ் தெரியல..! இங்கிலீஷ் தெரியல..! டிக்கெட் பதிவாளர் செய்த செயல்.. 3 மணி நேரம் காத்திருக்கும் பயணிகள்.. தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பரபரப்பு
கோவில்பட்டி ரயில் நிலையத்தில், தட்கல் டிக்கெட் வழங்க ஊழியர் தாமதம் செய்ததால், பெண் ஒருவர் ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தட்கல் டிக்கெட் வாங்க 20க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்த போது, டிக்கெட் கவுண்டரில் இருந்த சென்ட் குமார் என்ற ஊழியரால் 3 மணி நேரமாகியும் தட்கல் டிக்கெட்டை வழங்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். ரயில்வே நிலைய அதிகாரிகளும் பொறுப்பற்ற முறையில் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழ், ஆங்கிலம் தெரியாமல் இந்தி மட்டுமே தெரியும் ஊழியர்கள் இருப்பதால் இதுபோன்ற பிரச்சினை வருவதாகவும், தமிழ் தெரிந்தவர்களை பணியமர்த்த வேண்டும் என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.