- துரைசாமிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மணிக்கட்டி மாடசாமி கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை புரட்டாசி மாதம் கடைசி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும்... புதிய மணிகளை வாங்கி கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர்... மேலும் ஆடு,கோழி, மாடு, உள்ளிட்டவைகளை தானமாக வழங்குவர்...
- இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று புரட்டாசி மாத கடைசி வெள்ளி அன்று துவங்கியது... நேற்று இரவு கொடை நடைபெற்றது... 2ம் நாளான இன்று ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ விருந்து நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது... 6 ஆயிரம் கிலோ ஆட்டுக்கறி, ஆயிரம் சேவல்கள், 2 ஆயிரம் கிலோ அரிசி ஆகியவற்றில் விருந்து தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது... பல்லாயிரக்கணக்கான ஆண்கள் விருந்துண்டு மணிக்கட்டி மாடசாமியை வழிபட்டுச் சென்றனர்...