கடன் கொடுக்க சென்ற இடத்தில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர் - மொபைலில் அந்த மாதிரி போட்டோஸ்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் அகஸ்டின். திருமணமாகி 5 வயது குழந்தைக்கு தந்தையான இவர், பிரபல பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில், நிறுவனத்தில் கடன் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டிற்கு, கடனை வசூல் செய்ய சென்ற அகஸ்டின், வாடிக்கையாளரின் மகளிடம் தனக்கு திருமணமாக வில்லை எனக் கூறி பழகி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அகஸ்டினை அப்பெண் காதலிக்க ஆரம்பித்ததை அடுத்து, அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கிய அகஸ்டின், பின்னர் திருமண பேச்சை எடுத்த அப்பெண்ணை கொலை மிரட்டல் விடுத்து மிரட்டியிருக்கிறார். தொடர்ந்து, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாகவும் கூறி அச்சுறுத்தி இருக்கிறார். முடிவில் அகஸ்டினுக்கு திருமணமாகி குழந்தை இருப்பது தெரியவர, இது குறித்து தன் தந்தை மூலம் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகாரளித்திருக்கிறார். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், பிரபல பைனான்ஸ் நிறுவனத்தின் கலெக்ஷன் பாயான அகஸ்டினை கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.