"சென்னையில போலீஸா இருக்கேன்..இங்க என்கவுன்டருக்கு வந்திருக்கேன்" - தூத்துக்குடியை அலறவிட்ட தோழி

Update: 2024-07-02 02:45 GMT

தூத்துக்குடியில் போலீஸ் எஸ்.ஐ. எனக்கூறி, தன்னுடன் படித்த தோழிகள் வீடுகளில் நகை, பணத்தை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.தூத்துக்குடி ராஜபாளையம் பகுதியை சேர்ந்த கங்காதேவி என்பவர் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர், சென்னையில் போலீஸ் எஸ்.ஐ. எனக்கூறி, மேற்கு காமராஜர் நகரில், தன்னுடன் படித்த சக தோழியின் தாய் கிருஷ்ணவேணியை நம்பவைத்துள்ளார். என்கவுண்டருக்கு வந்துள்ளதாக கூறி தங்கியுள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த தாலி மற்றும் 2 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனதால், கிருஷ்ணவேணி போலீசில் புகார் அளித்துள்ளார். அதே நேரத்தில் தாய்நகர் சுனாமி காலனியில் மற்றொரு தோழி வளர்மதியின் வீட்டுக்கு சென்ற கங்காதேவி, செங்கல்பட்டில் எஸ்.ஐ.ஆக பணியாற்றுவதாகவும், குற்றவாளியை பிடிக்க போகும்போது காயம் ஏற்பட்டதாகவும் கூறி தங்கியுள்ளார். அதே நேரத்தில், வீட்டில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதால், வளர்மதியும் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், மேட்டுப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கங்காதேவியை, வளர்மதியும் அவரது கணவரும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் உடையில் சுற்றித் திரிந்த கங்காதேவி வேறு யாரிடமெல்லாம் திருடியுள்ளார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்