ஊரையே காலி செய்தும் திருந்தாத மனைவி... கணவனுக்கு கொலை வெறியேற்றிய கட்டில் உல்லாசம் கடைசியில் ரத்த வெள்ளத்தில் துடித்த அப்பாவி

Update: 2024-09-07 09:13 GMT

தூத்துக்குடி அருகே தகாத உறவு பிரச்சனையில், அண்ணனுக்கு பதில், தம்பி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முத்தையாபுரத்தைச் சேர்ந்த செல்லப்பா என்பவரின் மனைவி சக்திக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

செல்லப்பா கண்டித்தும் சக்தி கேட்காததால், தனது வீட்டை ஏரல் அருகே உள்ள மாறமங்கலத்திற்கு மாற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

இருப்பினும் தகாத உறவு தொடர்ந்ததால், வினோத்குமாரை தேடி அவரது வீட்டுக்குச் சென்ற செல்லப்பா, அங்கு உறங்கிக் கொண்டிருந்த வினோத்குமாரின் தம்பி பிரவீனை

வினோத் என நினைத்து அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்து வந்த முத்தையாபுரம் போலீசார், பிரவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்