மனைவியின் தங்கையை கடத்தி ரகசிய குடித்தனம்... கணவனின் கடைசி போன்கால் - சாம்பலான பயங்கரம்

Update: 2024-08-09 06:46 GMT

மனைவியின் தங்கையை கடத்தி ரகசிய குடித்தனம்... கணவனின் கடைசி போன்கால் - கைக்கு கிடைக்காமல் சாம்பலான பயங்கரம்

மருமகனுடன் சென்ற இளைய மகள் மர்மமான முறையில் உயிரிழந்ததாக, நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் பெண்ணின் தந்தை புகார் கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடத்தைச் சேர்ந்த நம்பிராஜா என்பவர், திசையன்விளையில் உள்ள மாமனார் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றபோது, மனைவியின் தங்கையும், பல் மருத்துவருமான நீலவேணியிடம் நெருங்கிப் பழகியதாக தெரிகிறது. இதையறிந்த நீலவேணியின் பெற்றோர் பலமுறை கண்டித்தும், இருவரும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஏழு மாதங்களுக்கு முன்பு இருவரும் மாயனமான நிலையில், வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தபோது, நீலவேணியை நம்பி ராஜா கடத்திச் சென்றது தெரியவந்தது.

ஒரு வாரத்துக்கு முன்பு, மனைவி செல்வதேவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நம்பிராஜா, நீலவேணிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

இதையடுத்து நீலவேணியின் பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது, அவர் இறந்து விட்டதாகவும், அவருடைய உடலை கணவர் எனக் கூறி நம்பிராஜா வாங்கிச் சென்று மின்மயானத்தில் எரித்து விட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நீலவேணியின் தந்தை, நாகர்கோவில் மாவட்ட எஸ்.பியை சந்தித்து நம்பிராஜா மீது புகார் அளித்துள்ளார். இந்நிலையில், தலைமறைவான நம்பிராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்