கணவன் வெளிநாட்டில்.. மனைவி தனி வீட்டில்.. இளைஞர் செய்த வெறிச்செயல்.. போலீஸ் அதிரடி

Update: 2024-08-20 15:45 GMT

திருவாரூர் அருகே உள்ள இளவங்கார்குடி ராஜகுரு நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாவதி. இவருக்கு திருமணமான நிலையில், கணவர் புருனே நாட்டில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் தனியே வசித்து வந்த பிரபாவதி, கத்தியால் தலையில் குத்தப்பட்டும், கழுத்தறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு வீட்டிற்குள் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் திருடப்பட்டிருந்த நிலையில், நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இளவங்கார்குடி கீழத்தெருவை சேர்ந்த 20 வயது இளைஞரான சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். கேபிள் வேலை பார்க்கும் சந்தோஷ், சம்பவத்தன்று காலையில் பெண்ணின் வீட்டிற்கு கேபிள் வேலை தொடர்பாக வந்திருக்கிறார். அப்போது வீட்டை நோட்டமிட்ட அவர், நகைகளை கொள்ளையடிப்பதற்காக இரவில் மீண்டும் வீட்டிற்குள் புகுந்த நிலையில், நகைகள் ஏதும் இல்லாததால், பெண்ணை கொன்று அவரது தாலி சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்