வீடு கட்டும் அக்ரிமெண்ட்டை மீறி தப்பு தப்பாக கட்டிய இன்ஜினியர்.. ஓனருக்கு ரூ.54 லட்சம் தர உத்தரவு.. கேஸ் போட்டு ஜெயித்த சாமானியன்..

Update: 2024-07-10 10:36 GMT

ஒப்பந்தத்தை மீறி அதிக பணம் பெற்று ஏமாற்றிய பொறியாளருக்கு 54 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் வண்டாம் பாலையை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர், பொறியாளர் சக்திவேலிடம், தனக்கு வீடு கட்டி தர 2021 ஜனவரியில் வாய்மொழி ஒப்பந்தம் செய்தார். வீடு கட்டுவதர்காக, ஸ்வீடனில் உள்ள சோமசுந்தரத்தின் மகனிடம் 17 லட்சத்து 30

ஆயிரம் ரூபாயையும், சோமசுந்தரம் மற்றும் அவரது மனைவியிடம் இருந்து 24 லட்சம் ரூபாயையும் சக்திவேல் பெற்றுள்ளார். ஆனால் வீட்டில் வேலையை சரி வர முடிக்காமல் இழுத்தடித்ததுடன் பல்வேறு குறைகளுடன் வீட்டை கட்டியுள்ளார். மேலும் ஒப்பந்தந்தத்தை

மீறி கூடுதலாக பணத்தைப் பெற்றும் இந்த வீட்டிற்கு வாங்கிய பொருட்களை எடுத்துச் சென்று தனியாக அவருக்கு ஒரு வீடு கட்டிக் கொண்டதாகவும் கடந்த 2023 நவம்பரில், திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சோமசுந்தரம் வழக்கு தொடர்ந்தார்.

ஆய்வறிக்கையின் அடிப்படையில், சோமசுந்தரத்திற்கு பொறியாளர் சக்திவேல் 54 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதை 9 சதவீத வட்டியுடன் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்