கண்முன்னே பறிபோன உயிர்... உறைந்து நின்ற மனைவி, மகன் - கலெக்டர் ஆபிசில் அதிர்ச்சி சம்பவம்... கலங்கடிக்கும் காட்சி
திருவாரூரில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகை கிடைக்கவில்லை என புகார் அளிக்க வந்த முதியவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது வருங்கால வைப்புத்தொகையை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்க சென்ற நாகராஜன் என்ற முதியவர், மக்கள் குறைதீர் கூட்டத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதியவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், அவரது மனைவி மற்றும் மகன் செய்தவறியாமல் தவித்தது மனதை கலங்கச் செய்தது....