திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த மேல்மா கிராமத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட விவசாயிகள் மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ. ஜோதியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் கண்டன கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.