பிரசவத்திற்காக வந்த பெண்ணிற்கு தவறான சிகிச்சை.. கோமாவிற்கு சென்ற கர்ப்பிணி

Update: 2024-06-26 15:38 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளூர் பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்பவர், கடந்த 2023-ல் ஆரணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பிரசவத்திற்கு பின்னர், ஜெயந்தியின் பின்பக்க தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அதனை பெற்றோருக்கு தெரிவிக்காமல், வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், 57 நாட்களுக்கு பின்னர், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஜெயந்தி, தற்போது வரை சுயநினைவின்றி சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஜெயந்தியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆரணி மருத்துவமனையில் மாவட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்