பெண்களுக்கு கொலை மிரட்டல் -காங். நிர்வாகி செய்த பகீர் செயல் - திருவள்ளூரில் பரபரப்பு
காங்கிரஸ் நிர்வாகி நிலத்தை அபகரிக்க முயல்வதாக, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யிடம் பெண்கள் கண்ணீருடன் புகார் அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவருக்குச் சொந்தமான 5 சென்ட் நிலத்தை கடம்பத்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர் சதீஷ் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. சமீபத்தில், அடி ஆட்களுடன் வந்து சதீஷ் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாக தெரிகிறது. இதனால் பயந்து போன கோவிந்தம்மாள் தனது உறவினர்களுடன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தன்னைக் காப்பாற்றுமாறு கண்ணீர் மல்க புகார் அளித்தார்.